பச்சை மிளகாயில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.