இரவு உணவு உட்கொண்ட பிறகு நடப்பது கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறைகின்றது.
இரவு உணவிற்கு பிறகு நடப்பது தசைகள் குளூகோசை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கின்றது.
இரவு உணவு உட்கொண்ட உடனேயே தூங்கச்செல்வதோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதோ நல்லதல்ல. இரவு உணவிற்கு பிறகு நடப்பதால், செரிமானம் சீராகி வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன.
இரவில் நடப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இரத்த ஓட்டமும் மேம்படுகின்றது. இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது.
நடைப்பயிற்சி செய்யும்போது, உடலிலும் மனதிலும் உள்ள இறுக்கமும், அழுத்தமும் தளர்ந்து உடலும் மனமும் லேசாகிறது. இதன் மூலம் மன ஆரோக்கியம் மேம்படுகின்றது.
இரவு உணவுக்கு பின் நடப்பது ஆரோக்கியமான உறக்கத்திற்கு வழி வகுக்கிறது. உடல் செயல்பாட்டின் மூலம் உடல் தரமான தூக்கத்திற்கு தயாராகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.