பப்பாளிக் காயை அலட்சியமா நினைக்காதீங்க... எக்கச்சக்க நன்மைகள் இருக்கு!

Vidya Gopalakrishnan
May 08,2024
';

பப்பாளி காய்

பப்பாளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது.

';

செரிமானம்

பப்பாளிக்காயில், உள்ள பப்பைன் என்ற எண்சைம் மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

';

மூட்டு வலி

பப்பாளிக்காயில் உள்ள பல்வேறு ஃபைட்டோ கெமிக்கல்கள் வீக்கத்தை குறைத்து, மூட்டு வலி உட்பட பல வலிகளை போக்குகிறது.

';

உடல் பருமன்

பப்பாளிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

';

சரும ஆரோக்கியம்

பப்பாளிக் காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஃப்ரீராடிக்கல்களால் ஏற்படும் சரும சேதத்தை தடுக்கிறது.

';

இதய ஆரோக்கியம்

பப்பாளிக்காயில் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

கண் ஆரோக்கியம்

பப்பாளிக்காயில் உள்ள அதிக வைட்டமின் ஏ, நல்ல கண் பார்வை மற்றும் வயோதிகம் தொடர்பான பார்வை குறைவை தடுக்க உதவுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story