சுகர் நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை உட்கொள்ள வெண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில காய்கறிகளை பற்றி இங்கே காணலாம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் சுகர் நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இனிப்பு சுவை கொண்ட இதை தவிர்ப்பது நல்லது.
ஸ்வீட் கார்ணில் ஸ்டார்ச் இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பூசணிக்காய் இரத்த சர்கரை அளவை திடீரென அதிகரிக்கச்செய்யும். ஆகையால், இதில் கவனம் தேவை.
உருளைக்கிழங்கு சாப்பிடுவது சுகர் நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதல்ல. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக சுகர் லெவல் வேகமாக அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.