இரவில் நல்ல உறக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரவு உணவில் அதிக காரமான உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.
அதிக எண்ணெய் கொண்ட கனமான உணவுகளை இரவு தூங்கும் முன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்
இரவு தூங்கும் முன் காபி அல்லது டீ குடித்தால் முறையான உறக்கம் இருக்காது.
சாக்லேட்டுகள், இனிப்புகள் போன்ற அதிக சர்க்கரை உள்ள உணவுகளை இரவில் உட்கொள்ள வேண்டாம்.
இரவு தூங்கும் முன் மது அருந்தினால், அது உறக்க முறையை கெடுத்து அமைதியான தூக்கத்தை கெடுத்துவிடும்.
சிட்ரஸ் உணவுகள் மற்றும் அசிடிக் உணவுகள் இரவு உறக்கத்தின் போது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும்.
தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும், இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க விழிக்க வேண்டி இருக்கும்.