பொதுவாக அதிகமாக நெய் உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையல்ல.
சுத்தமான நெய்யை உட்கொள்வதால் உடல் எடையை குறைக்கலாம். நெய்யை சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அதுவும் எடையைக் குறைக்க உதவும்.
எடையை விரைவாகக் குறைக்க எவ்வளவு நெய்யை, எப்படி நாம் உட்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சமையலில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தும் நபர்கள், அதற்கு பதிலாக நெய்யைப் பயன்படுத்தலாம். நெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும், பாலில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.
விசித்திரமாகத் தோன்றினாலும் உடல் எடையை குறைக்க காபியில் நெய் சேர்த்து குடித்தால், பசி குறையும், வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படும்.
உடல் எடையை குறைக்க நெய்யை எனர்ஜி பானத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரையும், செரிமானம் மேம்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.