கொய்யாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளதால், செரிமானத்திற்கு கடினம். எனவே இதனை தவிர்ப்பது நல்லது
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரித்து ஆசிடிட்டியை உண்டாக்கும்
பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிறு உப்புசம் அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
வாழைப்பழங்களில் அதிக மெக்னீசியம் மற்றும் கால்ஷியம் உள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.
தக்காளியில் அதிக அளவு டானிக் அமிலம் உள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடுவது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் நெஞ்செரிச்சல், அழற்சிக்கு வழிவகுக்கும்.
அதிகளவு நீர்சத்து கொண்ட தர்பூசணியை வெறூம் வயிற்றில் சாப்பிடுவதால், வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம்
மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு, வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.