தூங்கும்போது இடது பக்கத்தில் தூங்குவது பல்வேறு உடல் செயல்பாடுகள் மற்றும் உறுப்புகளை ஆக்கப்பூர்வமாக பாதிக்கும். இடது பக்கமாக ஒருக்களித்து உறங்குவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வயிறு இடது பக்கம் இருப்பதால் செரிமானம் சிறப்பாக இருக்கும்
இடது பக்கம் படுப்பதால், இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய உதவும். இதனால் இதயத்தின் அழுத்தம் குறைந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுவதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது
பல பிரச்சனைகளுக்கு காரணமாகும் குறட்டை, இடதுபுறமாக படுத்தால் குறையும்
நமது இடதுபுறம் நிணநீர் மண்டலம் அமைந்துள்ளது. இந்தப் பக்கத்தில் தூங்குவது, நிணநீர் முனைகளை வடிகட்டவும், கழிவுகள் மற்றும் நச்சுகளை மிகவும் திறமையாக அகற்றவும் உதவும்
இடது பக்க தூங்குவதால், கருப்பைக்கு இரத்த ஓட்டம் மேம்படுகிறது. மேலும், பிரசவத்தின்போதும் இலகுவாக இருக்க, கர்ப்பிணிகள் இடப்புறமாக ஒருக்களித்து படுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
இடது பக்க தூக்கம், வலது நுரையீரலை முழுமையாக விரிவடைய அனுமதிப்பதன் மூலம் சிறந்த நுரையீரல் செயல்பாட்டிற்கு உதவும்
வயிற்றில் அமில சுரப்பு அதிகமாக இருப்பவர்கள், இடது பக்கம் தூங்குவது வயிற்றில் அமிலம் பாய்வதைத் தடுக்க உதவும்