கறிவேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பில் கறிவேப்பிலை அதிக அளவில் உதவும். இதை தினமும் உட்கொள்வதால் பருமன் குறையும்.
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ கண்களின் திறனை மேம்படுத்தி கண்களின் பாதுகாப்பில் உதவுகிறது.
கூந்தல் வளர்ச்சியில் கறிவேப்பிலை மிகவும் உதவும். இதை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து, அந்த என்ணெயை வடிகட்டி பயன்படுத்தலாம்.
தினமும் கறிவேப்பிலையை உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவும்.
கறிவேப்பிலை நம் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலையை தினமும் சாப்பிடுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது.