அகத்தை சீராக்கும் சீரகத்தை உணவில் சேர்ப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆனால், சீரகத்தை அதிக அளவில் உட்கொள்வது ஆபத்து.
சீரகத்தை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். எனவே சீரகத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
நீண்ட நாட்கள் சீரகத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிக அளவு சீரகத்தை உட்கொள்வதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிக அளவில் குறைந்து ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.
சீரகத்தை அதிகமாக உட்கொள்வது ஏப்பம் அதிக அளவில் ஏற்படும். உடலில் இருந்து வாயு வெளியேறுகிறது என்றாலும், அடிக்கடி வரும் ஏப்பம் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சீரகத்தை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் காரணமாக, மார்பில் எரிச்சல் உணர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.