இந்த அழகிய பச்சை நிற இலைகளின் மருத்துவ நன்மைகளை படித்தறிந்து பயன் பெறுவோம்.
வெற்றிலை காயங்களை ஆற்றுவதாகவும், மேலும் வெற்றிலையின் சாறு தீக்காயங்களை சரி செய்வதில் நல்ல விளைவுகள் ஏற்படுததும்.
வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும்.
வெற்றிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், அவை மேலும் பரவுவதையும் தடுக்கிறது.
வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும்.
இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் திறன் உலர் வெற்றிலை பொடியில் இருப்பதாகவும், மேலும் இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.