கொலஸ்ட்ரால் இன்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது.
இது பல்வேறு இருதய நோய்களுக்கு மூல காரணமாக உள்ளது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், முழு உடலிலும் கடுமையான தாக்கம் ஏற்படும்.
உங்கள் கொலஸ்ட்ரால் அளவை திறம்பட குறைக்கும் 5 சிறந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள தக்காளி இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
அவகோடா எல்டிஎல் மற்றும் எச்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.
ஆப்பிள், எல்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமற்ற அளவைக் குறைத்து, பல நோய்கள் மூலம் நம் இதயம் சேதப்படுத்தாமல் தடுக்கின்றது.
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.