உணவுகளில் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. சிலவற்றை சில உணவுடன் சாப்பிட கூடாது.
அப்படி சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள், ஊட்டச்சத்து பிரச்சினைகள், நச்சுத்தன்மை ஏற்படலாம்.
தவிர்க்க வேண்டிய சில உணவு சேர்க்கைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலத்தன்மை, பாலில் உள்ள புரதம் இரண்டும் சேர்ந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
பாஸ்தா அல்லது ரொட்டி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை புரதம் நிறைந்த உணவுகளுடன் சாப்பிடுவது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
ஆபத்தான உணவு சேர்க்கைகளில் ஒன்று பால் மற்றும் மீன். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைத்து உடலில் நச்சுகள் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
காஃபின் மற்றும் சர்க்கரை உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கும்.
வெங்காயம் வாயுவை உருவாக்கும் உணவு. எனவே இதனை தயிருடன் இணைந்தால் அது அசௌகரியம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.