சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு பலியாகும் டெல்லியில், காற்று மாசு ஏற்படுத்தும் சுகாதார பிரச்சனைகளில், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது
கடந்த 5 நாட்களில் தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. சுவாசத்திற்கு ஆபத்தான அளவுக்கு காற்றில் நச்சு கலந்துவிட்டது.
நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்க, தில்லி-என்சிஆர் பகுதியில் கட்டுமானப் பணிகள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்
அடுத்த 15-20 நாட்கள் காற்று மாசு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் 1 முதல் தொடங்கும்). கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டத்தை மதிப்பிடுவதற்கு டெல்லி மாநில அரசுத் துறைகள் கூட்டத்தை நடத்தவிருப்பதாக டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்
டெல்லி - 300; நொய்டா - 250; குருகிராம் - 270; ஃபரிதாபாத் - 280; காசியாபாத் - 290
முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், வெளியில் சென்றால் முகக்கவசம் அணிய வேண்டும்
குறைவாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அதிக அளவு நீர் பருகவும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். மரம் அல்லது பிற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்கவும்.
ஆண்டுதோறும் டெல்லியில் இந்த பருவத்தில் காற்று மாசுபடுவது வழக்கம் என்றாலும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், உங்கள் நுரையீரலைப் பாதுகாக்கவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும்