கேல்சியம் மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ள பால் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
வைட்டமின் கே -வின் சிறந்த ஆதாரமான கீரை வகைகள் இரத்த அணுக்கள் நன்றாக உறைவதற்கு உதவி, மறைமுகமாக பிளேட்லெட் எண்ணிக்கையில் உதவுகின்றன.
டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள் தொடர்ந்து பப்பாளி இலை சாறை குடித்து வந்தால் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள மாதுளை இரத்த அளவை விரைவாக உயத்த உதவும்.
பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன.
பீட்ரூட்டில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமானவை.
ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி பிளேட்லெட்டுகளை அதிகரித்து இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது.