உங்கள் செல்ல குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் செலவுகளை சமாளிக்க குழந்தையின் இள வயதிலேயே சேமிப்பை தொடங்குவது நல்லது.
மத்திய அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்னும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
உங்கள் குழந்தை பிறந்த உடனேயே, அதன் பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம்.
உங்கள் குழந்தைக்கு 10 வயது பூர்த்தி அடையும் முன்பாக இந்தத் முதலீட்டு திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் மகளுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் போது முதிர்வு தொகையில் 50 % பெற்றுக் கொள்ள முடியும். 21 வயதில் மீதம் உள்ள பணத்தை பெற்று கொள்ளலாம்.
தற்போது இந்த திட்டத்திற்கு அரசு 8 சதவீத வட்டி வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில், மாதம் ரூ.12500 என்ற அளவில் முதலீடு செய்து வந்தால் உங்கள் குழந்தையின் எதிர்கால தேவைக்கு சுமார் ரூ.64 லட்சம் பெறலாம்.