காரை ஸ்மார்ட் காராக மாற்ற JioMotive சாதனத்திற்கு 58% தள்ளுபடி கொடுத்தது ரிலையன்ஸ் நிறுவனம்
எந்த காரையும் நிமிடங்களில் ஸ்மார்ட் காராக மாற்றக்கூடிய பாக்கெட் அளவு OBD சாதனமான JioMotive ஐ சமீபத்தில் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார்
ஏற்கனவே இருக்கும் மொபைல் டேட்டா திட்டத்துடன் ஜியோவுடன் டேட்டாவைப் பகிர்ந்து கொள்கிறது. இதனால், மற்றொரு சிம் தேவையில்லை
ரிலையன்ஸ் ஜியோ ₹4999க்கு OBD சாதனத்தை கொடுக்கிறது. இது, அதன் MRPயில் 58% தள்லுபடி விலையாகும்
ஸ்மார்ட் அம்சங்களை உங்கள் காரில் ரீ-வயரிங் இல்லாமல் இணைக்க ஜியோமோடிவ் உதவுகிறது
டாஷ்போர்டின் கீழ் அமைந்துள்ள காரின் போர்ட்டில் செருகும் சாதனமாகும். இது நிறுவப்பட்டதும், அது இ-சிம் மூலம் ஜியோ நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். கூடுதலாக, இதற்கு தனி தரவுத் திட்டம் தேவையில்லை.
உங்கள் வாகனத்தின் இருப்பிடத்தையும் இயக்கத்தையும், அதை வேறு யாராவது பயன்படுத்தினாலும் உடனே தெரிந்துவிடும்
காரின் வேகம், ஆக்ரோஷமான பிரேக்கிங் மற்றும் பல போன்ற தரவை ஜியோமோட்டிவ் சேகரிக்கிறது. வாகனம் ஓட்டும் பழக்கத்தை மேம்படுத்த உதவும்