உங்கள் திருமணம் விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே உணர்வது நல்லது.
அடிக்கடி சண்டை, வாதங்கள் திருமண உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இவற்றை சரிசெய்வது நல்லது.
உணர்ச்சி ரீதியில் உங்கள் மனைவியிடமிருந்து விலகி இருப்பது திருமண உறவு பலவீனமடைவதற்கான அறிகுறி.
கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையில் சரியான பேச்சு வார்த்தை இல்லாமல் இருப்பது சிக்கலில் முடியும்.
உறவில் சந்தேகம் அந்த உறவில் உள்ள நம்பிக்கையை பொய்யாகிவிடும். ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படமால் இருப்பது நல்லது.
எந்த ஒரு விஷயத்தையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
கணவன் - மனைவி உறவில் நெருக்கும் குறைவது இறுதியில் விவாகரத்தில் முடிவடையும்.
திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை பேசி தீர்ப்பது நல்லது.
தற்போது அதிக விவாகரத்திற்கு காரணம் நிதி நெருக்கடி தான். இவை வீட்டில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி சண்டையில் முடிவடைகிறது.