வங்கி கணக்கிலிருந்து நெட்பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ வசதி இருந்து வந்த நிலையில், தற்போது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
அண்மையில் யூபிஐ வசதியுடன் கிரெடிட் கார்டை இணைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துவிட்டது. அதில் சாதகங்கள் இருப்பது போல பாதகங்களும் உள்ளன
கிரெடிட் கார்டு-யுபிஐ இணைப்பது நிச்சயமாக ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான வசதியை அதிகரிக்கும்
கிரெடிட் கார்டை யுபிஐ உடன் இணைப்பதால், கடன் சுமை ஏறும். ஏனெனில் டெபிட் கார்டில் செலவு செய்தால், இருக்கும் பணத்தை மட்டுமே செலவு செய்வோம். தற்போது அதிக செலவு செய்யும் அபாயம் அதிகரிக்கிறது
உங்கள் கிரெடிட் கார்டை யுபிஐ உடன் இணைப்பது தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுக்கும்
கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது அதிகமாக செலவு செய்துவிட்டு கடன் சுமையை அதிகரித்துக் கொள்ளும் அபாயங்கள் அதிகரிக்கின்றன
இணைப்பு சிக்கல்கள் பரிவர்த்தனை தோல்விகளுக்கு வழிவகுக்கும், இது மன அழுத்தத்தை உருவாக்கும்
மோசமான இணைய இணைப்பு உள்ள பகுதிகளில் யுபிஐ பயன்படுத்துவது சவாலாக இருக்கலாம், சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பேமெண்ட் செலுத்தும் உங்கள் திறனை இது பாதிக்கலாம்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை