2023 ஆண்டு நிலவரப்படி முகேஷ் அம்பானி இந்திய பில்லியனர்களின் வரிசையில் இரண்டாவது இடத்திலும், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்திலும் உள்ளார்.
இன்றைய நிலவரப்படி முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 86.9 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 7,24,089 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது.
அயராத உழைப்பு, தன்னம்பிகை, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் மொத்த உருவமாய் போற்றப்படும் திருபாய் அம்பானியின் மூத்த மகன்தான் முகேஷ அம்பானி.
முகேஷ் அம்பானி 1981 இல் RIL இல் சேர்ந்தார். பல ஆண்டுகளாக நிறுவனத்தின் அபார வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறார்.
அவரது தலைமையின் கீழ் ரிலயன்ஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி, சில்லறை விற்பனை, எரிவாயு ஆய்வு மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதன் செயல்பாடுகளை பன்முகப்படுத்தியுள்ளது.
அம்பானி அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் இந்திய சில்லறை வர்த்தகத்தில் நிறுவனத்தின் விரிவாக்கத்தை திறம்பட வழிநடத்தி, அதை நாட்டில் ஒரு முக்கிய சில்லறை சங்கிலியாக நிறுவினார்.
2010 -இல் ரிலையன்ஸ் ஜியோவுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தார். இன்று ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராக உள்ளது.
அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், வணிக உலகில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாகவும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகவும் உள்ளார்.