EPFO நடத்தும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மூலம் கிடைக்கும் பல வகையான ஓய்வூதியப் பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தகுதியான சேவையைச் செய்து 58 வயதை எட்டியவுடன் ஓய்வு பெற்றால் இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 வருட சேவையை முடித்தவராகவும் இருந்து EPF அல்லாத நிறுவனத்தில் சேர்ந்திருந்தால், அவர் எர்ளி ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார்.
இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த ஓய்வூதியத்தை பெற முடியும்.
இறந்த EPFO உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கு இந்த ஓய்வூதியம் நிதி உதவியை உறுதி செய்கிறது. EPS 95 இன் கீழ் குழந்தைகள் ஓய்வூதியம், இறந்த EPFO உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவி வழங்குகிறது.
EPF கணக்கு வைத்திருப்பவர் திருமணமாகாதவராக இருந்து இறந்துவிட்டால், அவரது தந்தை மற்றும் தந்தை இறந்த பிறகு, அவரது தாயார் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார்கள்.
இறந்த உறுப்பினரின் வாழ்க்கைத் துணையும் உயிருடன் இல்லையென்றால், அனாதை ஓய்வூதியம் மூலம் அவரது குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது. இந்த ஓய்வூதியத்தில் மாதாந்திர தொகை வழங்கப்படுகின்றது.
மனைவி அல்லது குழந்தைகள் இல்லாத EPFO உறுப்பினர் மரணம் அடைந்தால், நாமினியாக பரிந்துரைக்கப்பட்ட பயனாளிக்கு நாமினி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.