மூட்டு வலி வராமல் இருக்க 7 பழக்க வழக்கங்கள்...!
மூட்டுகளை பாதுகாக்க தினசரி சில பழக்க வழக்கங்களை கட்டாயம் செய்ய வேண்டும்
தினசரி நடைப்பயிற்சி, ரன்னிங் மற்றும் வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள்
கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். பால் பொருட்கள், கீரைகள் மற்றும் மீன் போன்ற உணவுகளை சாப்பிடவும்
மூட்டுகள் மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உட்காரும்போதும், நிற்கும்போதும், பொருட்களைத் தூக்கும்போதும் கவனமுடன் இருக்கவும்
உங்கள் மூட்டுகளின் லூப்ரிகேட் மற்றும் சரியாக செயல்பட உடலுக்கு தேவையான நிறைய தண்ணீர் குடிக்கவும்.
காலுக்கு ஏற்ற காலணிகளை பயன்படுத்தவும். காயங்களைத் தவிர்க்க தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்
ஆரோக்கியமான எடையை வைத்திருப்பது உங்கள் மூட்டுகளில், குறிப்பாக உங்கள் முழங்கால்கள், இடுப்பு மற்றும் முதுகில் அழுத்தத்தை குறைக்கிறது.
எலும்பின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும், சிக்கல்களை தீர்க்கவும் மருத்துவரிடம் தவறாமல் செல்லுங்கள்