பல முறை ஏடிஎம் கார்ட் தொலைந்துபோவதாலோ, பிற காரணங்களாலோ அவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. கார்டுகளை மாற்ற வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
கார்டுகளை மாற்ற பல்வேறு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் பற்றி இங்கே காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கியில், கார்ட் ரிப்ளேசுக்கான கட்டணம் ரூ.300 +18% ஜிஎஸ்டி ஆகும். இதற்கு மொத்தம் சுமார் ரூ.350 ஆகும்.
எச்டிஎஃப்சி வங்கியில் கார்ட் மாற்ற 200 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி தொகை வசூலிக்கப்படுகின்றது
ஐசிஐசிஐ வங்கியில் கார்ட் ரிப்ளேஸ் செய்ய ரூ. 200 மற்றும் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகின்றது.
கனரா வங்கியில் கார்டை மாற்ற ரூ.150 மற்றும் 18% ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.
டெபிட் கார்டை மாற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.150 முதல் ரூ.500 வரையிலான கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இதனுடன் ஜிஎஸ்டி தொகையும் செலுத்த வேண்டும்.