இன்று மக்கள் ஒருவருக்கொருவர் பணத்தை கொடுப்பதும் வாங்குவதும் மிகவும் சுலபமாகிவிட்டதற்கு காரணம் டிஜிட்டல் இந்தியா என்பதை மறுக்க முடியாது...
போன் மூலமாகவே ஒருவர், மற்றொருவருக்கு நொடிப் பொழுதில் பணத்தை மாற்றிவிட முடிகிறது. தற்போது கையில் ரொக்கப் பணம் கொண்டு செல்லும் போக்கும் குறைந்துவிட்டது
வேறொருவரின் கணக்கில் தவறாஅக பணம் மாற்றப்பட்டால், முதலில் அதைப் பற்றி உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்
யாருக்கு பணம் தவறாக சென்றதோ, அந்த நபரை தொடர்பு கொண்டு அனுப்பிய பணத்தை திருப்பித் தர கோரலாம். அந்த நபர் பணத்தைத் திருப்பித் தர மறுத்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம்
பணத்தை திருப்பித் தராதது ரிசர்வ் வங்கி விதிகளை மீறுவதாகும், இதற்கு தண்டனையும் விதிக்கப்படலாம். பொதுவாக தவறுதலாக ஒருவரின் கணக்கிற்கு பணம் வந்தால், அதை திருப்பித் தர வேண்டும்
பணம் திருப்பித் தரப்படாவிட்டால் வங்கிக்கு எந்த பொறுப்பும் இல்லை. இந்தப் பொறுப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே உள்ளது
எனவே, பணத்தை ஒருவருக்கு அனுப்பும்போது கவனமாக இருக்கவும். முதலில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பவும். தவறான எண்ணாக இருந்தாலும், நஷ்டம் தவிர்க்கப்படும்
இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு இணையச் செய்திகள் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது