EPF கணக்கு வைத்திருப்பவர்கள் 58 வயதில் 10 வருட சேவை முடிந்தவுடன் சூப்பரானுவேஷன் ஓய்வூதிய பலனைப் பெறலாம்.
ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 வருட சேவையை முடித்தவராகவும் இருந்தால் அவர் முன்கூட்டியே ஓய்வூதியத்தை பெறலாம். இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) இறந்துவிட்டால், அவரது விதவை மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் விதவை ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள்.
EPF கணக்கு வைத்திருப்பவர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை இறந்தால், 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் அனாதை ஓய்வூதியம் பெறலாம்.
EPF கணக்கு வைத்திருப்பவர் திருமணமாகாமல் இறந்துவிட்டால், அவரது தந்தை மற்றும் தந்தை இறந்த பிறகு, அவரது தாயார் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார்கள்.
இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார்.
EPF உறுப்பினர் ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், உறுப்பினரின் மரணத்திற்கு பிறகு நாமினி ஓய்வூதியத்தைப் பெறலாம்.
இந்த பதிவு பொதுவான தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை பார்க்கவும்.