பல நிறுவன பங்குகள் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் செல்வத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மல்டி பேக்கர் பங்கு டைகர் லாஜிஸ்டிக்ஸ், மூன்றே ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 1,400 சதவீதத்துக்கு ஆதாயம் கொடுத்துள்ளது
டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
பிஇஎம்எல் நிறுவனத்தின் ஆர்டர் கிடைத்ததை அடுத்து மும்பை பங்குச் சந்தையில் டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்கின் விலை ஏற்றம் காண தொடங்கியது.
நேற்றைய வர்த்தகத்தில், இந்த பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.656ஆக என்ற அளவுக்கு உயர்ந்து, இறுதியில் 595.65 ரூபாயில் நிறைவடைந்தது.
டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை கடந்த 3 மாதத்தில் 44 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 72 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது
டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்கு கடந்த 2 ஆண்டுகளில் 338 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது
கடந்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் முதலீட்டை 1,474 சதவீதம் அதிகரித்துள்ளது.