ரூ.10 லட்சம் கடன் பெற்று லட்சாதிபதியாகுங்கள்!
பாரத பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவர் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம்.
சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம் தொடக்கம்.
இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு நிதி நிறுவனங்களால் தகுதியான நபர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும்
விவசாயத்துடன் தொடர்புடைய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் கடன்களைப் பெறலாம்.
விண்ணப்பதாரர் குறைந்தது 3 ஆண்டுகள் வணிகம் செய்து கொண்டிருக்க வேண்டும். தொழில்முனைவோர் 24 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் PMMY அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான வட்டி விகிதங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன.