இந்திய பட்ஜெட் வரலாறு.... சில சுவாரஸ்ய தகவல்கள்!

Vidya Gopalakrishnan
Jul 23,2024
';

பட்ஜெட் 2024

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.

';

பட்ஜெட்

‘சிறிய பை’ என்பதைக் குறிக்கும் பிரெஞ்சு மொழி சொல்லான ‘போகெட்’ என்ற வார்த்தையிலிருந்து ‘பட்ஜெட்’ என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது.

';

முதல் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

';

சண்முகம் செட்டியார்

கோயம்புத்தூரில் பிறந்தவரான சண்முகம் செட்டியார், பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் ஓராண்டு காலம் மட்டுமே நிதியமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

';

பட்ஜெட் ஆவணங்கள்

1950ம் ஆண்டு வரையில் குடியரசு தலைவர் மாளிகையில் தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்பட்டு வந்தது. பின்னர் தில்லி மின்டோ சாலையில் உள்ள ஒரு அச்சகத்தில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கப்பட்டு வந்தன.

';

அச்சு இயந்திரம்

பின்னர் 1980ம் ஆண்டில், மத்திய நிதி அமைச்சகத்தில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டு, அங்கு அச்சிடப்படும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டது.

';

பட்ஜெட் தாக்கல்

தற்போது காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

';

துணிப்பை

பட்ஜெட் ஆவணங்களை எடுத்துச் செல்ல பாரம்பரிய முறையிலான சிவப்பு ப்ரீஃப்கேஸ் பயன்படாடை மாற்றி தேசிய சின்னத்துடன் கூடிய துணிப்பையில் வைத்து கொண்டு செல்லும் வழக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

';

இந்திரா காந்தி

சுதந்திர இந்தியாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவர் பிரதமராக இருந்தபோது, நிதித்துறையை கவனித்து வந்தார்.

';

பட்ஜெட் சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியாவில் 1860ம் ஆண்டு முதல் தற்போது வரை, 77 முழுமையான நிதிநிலை அறிக்கைகளும், 15 இடைக்கால நிதிநிலை அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

';

VIEW ALL

Read Next Story