நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இந்த நிதியாண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்று சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பலனளிக்கும் பல நல்ல செய்திகள் கிடைத்துள்ளன.
பெண்களை மகிழ்விக்கும் வகையில் இன்று நிதி அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பெண்கள் நலத்திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் பெண்கள், அவர்களின் பொருளாதார நிலை, தற்சார்பு ஆகியவற்றின் பக்கம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
தொழில்துறையுடன் இணைந்து பணிபுரியும் பெண்கள் விடுதிகளுக்கான முன்மொழிவை நிதி அமைச்சர் வழங்கினார்.
பெண் பணியாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க குழந்தைகள் காப்பகங்களை நிறுவுவது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் சார்ந்த திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழு (SHG) நிறுவனங்களுக்கான சந்தை அணுகல் ஊக்குவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படலாம் என்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது.