பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. எனினும் சில அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன.
தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிறுவனம் செய்யும் பங்களிப்பு 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, பணியாளர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பும் பங்களிக்கும் NPS கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தாமாக இதில் பங்களிக்கும் நபர்களுக்கு இதனால் எந்த பலனும் கிடைக்காது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைத் தவிர, NPS -இல் பங்களிக்கும் பிற முதலாளிகள் / நிறுவனங்கள் புதிய வரி விதிப்பில் உள்ள பணியாளர்களின் ஊதியத்தில் 14% -ஐ பங்களிக்க வேண்டும்.
முன்னர் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே நிறுவனங்களின் பங்களிப்பு 14% ஆக இருந்தது.
தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய பிற நிறுவனங்களுக்கு இது 10% மட்டுமே இருந்தது.
பழைய வரி முறையில் NPS பல நன்மைகளை வழங்குகிறது. ஊழியரின் பங்களிப்பில், பிரிவு 80CCD(1) மற்றும் பிரிவு 80C இன் கீழ் அவர்களது பங்களிப்பு ரூ 1.5 லட்சம் வரை விலக்குக்கு தகுதியுடையது.
புதிய வரி முறையின் கீழ் பணியாளர்களின் பங்களிப்புகளுக்கு வரிச் சலுகைகளை கோர முடியாது.