திருப்பிச் செலுத்தாத கடனுக்காக, வங்கி உங்களை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்று அறிவித்திருந்தாலும், சில உரிமைகள் உண்டு. அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்
நீங்கள் கடன் வாங்கியிருந்தால், கடன் வாங்குபவருக்குக் கிடைக்கும் மனித உரிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கடனைச் செலுத்தாத பட்சத்தில், கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பப்பெற மீட்பு முகவர்களின் சேவையைப் பெறலாம். ஆனால், மீட்பு முகவர்களுக்கு சில வரம்புகள் உண்டு
வாடிக்கையாளர்களை அச்சுறுத்தவோ அல்லது தவறாக நடந்துகொள்ளவோ மீட்பு முகவர்களுக்கு உரிமை இல்லை
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளரின் வீட்டிற்குச் செல்ல முடியும்
தொலைபேசியில் திரும்பத் திரும்ப பேசி மிரட்டி தவறாகப் பேசுவதோ, ஆபாசமான நடந்துக் கொள்ளவோ மீட்பு முகவருக்கு அதிகாரம் இல்லை
மனரீதியாக தொந்தரவு செய்து மன உலைச்சல் ஏற்படுத்தினால் நீங்கள் வங்கியில் புகார் செய்யலாம்.
உங்கல் புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை