நிலையான வருமானத்தை தரும் முதலீட்டுகளில் PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த முதலீடாகும்.
PPF கணக்கில் முதலீட்டாளர்கள் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்யலாம். 15 வருட முடிவில் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறலாம்.
வருடத்திற்கு ரூபாய் 500 முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை PPF கணக்கில் முதலீடு செய்யலாம்.
PPF கணக்கில் வெளியீடு செய்வதன் மூலம் வருமான வரியை சேமிக்கலாம். அதோடு இருந்து கிடைக்கும் வருமானத்திற்கும் வரி இல்லை
PPF கணக்கு மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 %. ஒவ்வொரு காலண்டிலும் இதற்கான வட்டி திருத்தி அமைக்கப்படுகிறது.
முதிர்வுக்கு முன்னாலே பணத்தை எடுக்க விரும்பினால், கணக்கு தொடங்கிய வருடத்தை தவிர்த்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு பணத்தை எடுக்கலாம்.
பணத்தை திரும்பப் பெற விரும்பினால், கணக்கு இருப்பில் உள்ள பணத்தில் 50 சதவீதம் மட்டுமே திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது