நமது குடும்ப உறுப்பினர்களுக்கான பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், மருத்துவ செலவுகள் குறித்த கவலை இல்லாமல் நாம் நிம்மதியாக இருக்கலாம்.
குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த உடல்நலக் காப்பீட்டுக் பாலிசியை எடுக்கும் போது, அதன் கவரேஜின் நன்மைகளை விரிவாகப் படிக்கவும்.
நோய் அல்லது விபத்தின் போது சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பாலிசி தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிப்பது அவசியம்.
பாலிசியின் கால அளவு என்ன, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை ஆகியவற்றைக் கவர் செய்யும் வசதி உள்ளதா, என்பதையும் பார்க்கவும்.
பல பாலிசிகளில், நாள்பட்ட நோய்கள் அல்லது 30 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட நோய்கள் காப்பீட்டில் சேர்க்கபடுவதில்லை. அத்தகைய பாலிசி எடுப்பதை தவிர்க்கவும்.
நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக, க்ளைம்களை செட்டில் செய்வதிலும் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாத நிறுவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. தேவைப்பட்டால், ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்யவும்.