பட்ஜெட் 2023-ல் பெண்களுக்கான சிறpபு திட்டத்திற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டார்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் துவங்கிவிட்டது.
இது இந்தியன் போஸ்ட் ஆபிசின் ஒரு முறை முதலீட்டு (ஒன் டைம் டெபாசிட்) திட்டமாகும்.
MSSC திட்டத்தில் பெண்கள் 1000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் 2023 -க்குள் முதலீடு செய்தால் 7.5% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்.
2 ஆண்டுகளுக்கான மெச்யூரிட்டிக்கு பிறகு பெண்கள் வட்டியுடன் முழு தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
இங்கு முதலீடு செய்யும் முன், தபால் நிலையம் அல்லது வங்கிகளில் கணக்கை திறக்க வேண்டும்.
MSSC திட்டத்தில் அனைத்து வயது பெண்களும் முதலீடு செய்யலாம்.
சிறுமிகளின் பெயர்களில் அவர்களது பாதுகாவலர்கள் கணக்கை திறக்கலாம்.
இந்த திட்டம் மெச்யூர் ஆன பிறகு அல்லது ஓராண்டுக்கு பிறகும் பணம் எடுக்கலாம்