அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே பலர்வ்நினைக்கிறார்கள். ஆனால், சில விஷயங்களை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் வாங்கும் போது, அவசரப்படாமல், குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கியை அல்லது நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும்.
கடன் தொகை, சமமாக்கப்பட்ட மாதாந்தர தவணையை மட்டுமல்லாமல் மற்ற கட்டணங்களையும் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பல நிறுவனங்களைச் சரிபார்த்து, அவற்றின் சேவைகளையும் பாதுகாப்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம்.
உங்கள் தங்கம் பாதுகாப்பாக இருக்கவும், நகையை மீட்டெடுக்கவும் நிறுவனத்தை சரியாக தேர்ந்தெடுப்பது முக்கியம்.
நீங்கள் நகைக் கடனைத் தேர்ந்தெடுக்கும்போது, புத்திசாலித்தனமான முடிவை எடுக்க இந்தக் குறிப்புகள் உதவும்.