தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வது மிக பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. இவற்றில் நல்ல வருமானத்திற்கான உத்தரவாதமும் கிடைக்கிறது.
போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை பெற விரும்பினால், மாதாந்திர வருமானத் திட்டம் MIS திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
தற்போது, போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இதில் 5 ஆண்டுகளுக்குத் தொகையை டெபாசிட் செய்யலாம்.
5 ஆண்டுகள் மெச்யூரிட்டிக்கு பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவார்கள். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தால், வட்டித் தொகையிலிருந்து மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.5550 சம்பாதிக்கலாம்.
ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000க்கு மேல் வருமானம் ஈட்டலாம்.
எம்ஐஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, வருமான வரி சட்டம் 80C -இன் கீழ் தள்ளுபடியும் கிடைக்கும்.
தபால் நிலைய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், குறைந்தபட்சமாக 1000 ரூபாயில் முதலீட்டை தொடங்கலாம். இந்த திட்டத்தில் ரூ.1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம்
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.