ஆண்கள் மனைவி, குழந்தைகள், குடும்பம் என சிந்தித்து அவர்களுக்காக பிரத்யேக திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
அப்படிப்பட்ட நபரா நீங்களும்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
உங்கள் மனைவி பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஒரு கணக்கை நீங்கள் தொடங்கலாம். வசதிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் இந்த கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
னைவியின் பெயரில் வெறும் 1,000 ரூபாயிலும் NPS கணக்கை திறக்கலாம். NPS கணக்கு 60 வயதில் மெச்யூர் ஆகும்.
நீங்கள் விரும்பினால், மனைவிக்கு 65 வயது ஆகும் வரை என்பிஎஸ் கணக்கை தொடர்ந்து இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் மனைவிக்கு 30 வயது என வைத்துக்கொள்வோம். அவருடைய என்பிஎஸ் கணக்கில் (NPS Account) நீங்கள் மாதா மாதம் ரூ.5000 முதலீடு செய்து, முதலீட்டில் 10 சதவீதம் மதிப்பிடப்பட்ட வருமானம் கிடைத்தால், 60 வயதில் அவருக்கு சுமார் 1.12 கோடி ரூபாய் கணக்கில் இருக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் உங்கள் மனைவிக்கு சுமார் ரூ.45 லட்சம் கிடைக்கும். இது தவிர மாதா மாதம் ஓய்வூதியமாக சுமார் ரூ.45,000 கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) 2 லட்சம் வரை வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும். 60% தொகையை திரும்பப் பெறும்போதும் வரி விலக்கு கிடைக்கும். ரூ. 1.5 லட்சம் வரம்பை அடைந்த பிறகு ரூ.50 ஆயிரம் கூடுதல் முதலீட்டில் வரி விலக்கு கிடைக்கும்.