பிஎஃப் பணத்தை எப்போது, எந்த சூழ்நிலையில் எடுக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது பற்றிய புரிதல் இருப்பதும் அவசியமாகும்.
EPFO உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக EPF இலிருந்து பணத்தை எடுக்கலாம். இதில் ஊழியர்களுக்கு எந்த வித பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.
சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெற்று நல்ல இடத்தில் முதலீடு செய்யலாம்.
உங்களுக்கு ஒரு மாதத்திற்கு வேலை கிடைக்காவிட்டால், வட்டிப் பணத்தில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம்.
வேலையை விட்டு இரண்டாவது மாதம் முடிந்த பிறகு, 100% பணத்தை எடுக்கலாம்.
ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் சிக்கல்களை எதிர்கொண்டால், அவர்கள் எளிதாக PF பணத்தை எடுத்து குழந்தைகளின் கல்விக்கு தேவையான தொகையை முதலீடு செய்யலாம்.
குழந்தைகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டால், நீங்கள் எளிதாக PF-ல் இருந்து பணத்தை எடுத்து அவர்களின் திருமணத்திற்கு செலவிடலாம்.
வீடு கட்ட, வாங்க ஏற்படும் செலவுகளுக்கும் PF-ல் இருந்து பணத்தை எடுத்து பயன்படுத்தலாம்.