EPFO விதிகளில் மாற்றம்: PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்

Sripriya Sambathkumar
Aug 06,2024
';

PF உறுப்பினர்கள்

EPFO, PF உறுப்பினர்களுக்கான விவரங்களை புதுப்பிப்பதற்கும் திருத்துவதற்கும் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

';

UAN

இப்போது, ​​UAN ப்ரொஃபைலில் பெயர், பிறந்த தேதி அல்லது பிற தகவல்களில் ஏதேனும் திருத்தம் செய்ய, PF உறுப்பினர்கள் அதற்கான உறுதிப்பாட்டை அளிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

';

ஆதார் அட்டை

இதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றைச் சமர்ப்பிக்கலாம். இவற்றின் மூலம் திருத்தப்பட்ட விவரம் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

';

ஊழியர்களின் பெயர்

EPFO ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற சுயவிவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருத்துவதற்கான புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

';

EPFO

EPFO -இன் புதிய வழிகாட்டுதல்களின்படி, ​ப்ரொஃபைலில் செய்யப்படும் மாற்றங்கள் மேஜர் மற்றும் மைனர் என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

';

இபிஎஃப்ஓ

பெயரில் சிறிய தவறுகள், பிறந்த தேதியில் உள்ள சிறிய முரண்பாடுகள் போன்ற சிறிய மாற்றங்களை சரிசெய்ய, கூட்டு அறிக்கை கோரிக்கையுடன் ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பிற அரசாங்க ஆவணங்களை போன்றவற்றில் குறைந்தபட்சம் இரண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

';

இபிஎஃப் கணக்கு

பிறந்த தேதியில் உள்ள பெரிய தவறுகள், தவறான பெயர் அல்லது வேறு ஏதேனும் பெரிய திருத்தங்களுக்கு, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தது மூன்று தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஆவணங்களின் சரிபார்ப்பு இன்னும் கடுமையான முறையில் செய்யப்படும்.

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மை மற்றும் வசதிக்காக அவ்வப்போது இபிஎஃப்ஓ புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, பல பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story