EPFO சில குறிப்பிட்ட அவசரகாலங்களில் PF உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் கீழ், விண்ணப்பித்து 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.
ஆட்டோ-மோட் செட்டில்மென்ட்டின் (EPFO Auto Mode Settlement) கீழ், அவசரகாலத்தில் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்கலாம்.
EPFO சந்தாதாரர்கள் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் பிஎஃப் நிதியிலிருந்து ஆட்டோ க்ளெய்ம் முறையில் பணத்தை எடுக்கலாம்.
அவசரகாலத்தில் நிதியை க்ளைம் செட்டில் செய்வதற்கான தானியங்கி செயல்முறை அதாவது ஆட்டோ மோட் (Auto Mode) ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது உடல்நல பிரச்சனை, அதாவது நோய்களுக்கான சிகிச்சையின் போது மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
இப்போது இதன் கீழ் வரும் வசதிகள் அதிகரித்துள்ளன. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான நிதி உதவி என இவை அனைத்துக்கும் இப்போது ஆட்டோ மோட் செடில்மெண்டை பயன்படுத்தலாம்.
EPF கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது, தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிஎஃப் உறுப்பினர்களுக்கு முன்பணம் அளிப்பதற்கான செயல்முறை ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் கணினி மூலம் செய்யப்படும். இதற்கு யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்களின் கணக்கில் பணம் வந்து சேரும்.
இதற்கு பிஎஃப் உறுப்பினர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் KYC, க்ளைம் செய்வதற்கான தகுதி, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை அடங்கும்.