Personal Taxtion: நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நிதி அமைச்சர் 80C, வரி வரம்பு, வரி அடுக்குகள், ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் ஆகியவற்றில் மற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) தங்களது நீண்ட நாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு (8th Pay Commission), டிஏ அரியர், டிஏ உயர்வு, காலி இடங்களுக்கான பணி நியமனம் ஆகியவை பற்றிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) பல புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்படக்கூடும். பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக பெறும் வசதி அளிக்கப்படலாம்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் அதிகபட்சத் தொகை ரூ.5,000 -இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்படலாம்.
Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படக்கூடும் எனெ எதிர்பார்க்கபடுகின்றது. கொரோனா காலத்தில் இது நிறுத்தப்பட்டது.
வீட்டு கடனுக்கான (Home Loan) வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்த கோரிக்கை உள்ளது.
பெண்களுக்கான சில சிறப்பு நலத்திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெண் தொழில்முனைவோருக்கு சில சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் தவணை ஆண்டுக்கு 6,000 ரூபாயிலிருந்து ரூ.8,000 அல்லது 12,000 ரூபாயாக உயர்த்தப்படலாம்.
பணியாளர் வருங்கால வைப்பநிதி அமைப்பின் (EPFO) கீழ் வரும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) அதிகபட்ச ஊதிய வரம்பை அரசு 15,000 ரூபாயிலிருந்து 21,0000 ரூபாய் அல்லது 25,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் முழுமையான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.