பட்ஜெட் 2024... மருந்துகள் விலை முதல் ஆயுஷ்மன் பாரத் வரை முக்கிய எதிர்பார்ப்புகள்

Vidya Gopalakrishnan
Jul 23,2024
';

சுகாதார துறை

அதிக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை கட்டமைத்தல், குறைந்த கட்டணத்தின் சிறந்த சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் தொடர்பாக பட்ஜெட்டில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

';

சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு

ளர்ந்த நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுகாதாரத்துறைகு 10% முதல் 17% வரை நிதி ஒதுக்கும் நிலையில், இந்நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

ம்ருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

மருத்துவ துறையில், புதிய தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதையும், புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதையும் ஊக்குவிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) அதிகம் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.

';

மக்கள் மருந்தகம்

பிரதம மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY) போன்ற அரசாங்க திட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மலிவான விலையில் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

';

ஜெனரிக் மருந்துகள்

எனவே, மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும், ஜெனரிக் மருந்துகள் குறித்த விதிகள் ஏற்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

';

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத் மற்றும் விரிவான காப்பீட்டுத் திட்டம் மேலும் விரிவிபாடுத்தப்படுவதோடு, சிறந்த மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

';

மனநல சிகிச்சை

தரமான மனநல சிகிச்சை மற்றும் பயிற்சி அனைவருக்கும் கிடைப்பது உறுதி செய்யும் வகையில், மனநல சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

';

காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி

இந்தியாவில் மருத்துவ காப்பீடு மீது அதிக வரி விதிக்கப்படுகிறது தொடர்பாக மக்கள் அதிருப்தியுடன் உள்ள நிலையில், மருத்துவ காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை 18%க்குக் கீழ் குறைப்பது அவசியம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

';

செயற்கை நுண்ணறிவு

சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சுகாதார துறை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் சுகாதாரத்துறை அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது.

';

மருத்து காப்பீட்டுத் துறை

பட்ஜெட்டில், மருத்து காப்பீட்டுத் துறையில் வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story