ஆகஸ்ட் 1 முதல் ஏற்படவுள்ள சில முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த மாற்றங்கள் பலரது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
NPCI -இன் படி, FASTag சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து FASTagகளுக்கும் KYC புதுப்பிப்புகளை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். KYC செயல்முறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும்.
ஆகஸ்ட் 1 முதல், HDFC வங்கியின் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள் இருக்கும். CRED, Paytm, Mobikwik மற்றும் ஃப்ரீசார்ஜ் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தி HDFC கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் வாடகைக் கட்டணங்களுக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும்.
கூகுள் மேப்ஸ் இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது. நிறுவனம் தனது சேவைக் கட்டணங்களை 70% குறைப்பதாக அறிவித்துள்ளது.
வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இதற்கு பிறகு தாக்கல் செய்தால், அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், இந்த நிதியாண்டிற்கு பழைய வரி முறையையும் தேர்ந்தெடுக்க முடியாது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் (ஏர் டர்பைன் ஃப்யூயல் அல்லது ஏடிஎஃப்) மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜிக்கான கட்டணங்களை புதுப்பிக்கின்றன. புதிய விலைகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிவிக்கப்படும்
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் (LPG Cylinder) விலையில் மாற்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஜூலை மாதத்தில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி இது மேலும் குறைக்கப்படலாம் என்றும் வீட்டு உயபோக சிலிண்டர் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.