வாங்கிய அன்றே பங்குகளை விற்றால், அதை என்னவென்று அழைக்கலாம்?
ஒரே நாளில் செய்யும் பங்கு வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டுமா?
டே டிரேடிங் என்றும் அழைக்கப்படும் இண்ட்ராடே பங்கு வர்த்தகத்திற்கும் வரி உண்டு
டே டிரேடிங்கில் கிடைக்கும் லாபத்தை ’ஸ்பெக்குலேட்டிவ் பிசினஸ் இன்கம்’ என்று வருமான வரிச் சட்டம் வகைப்படுத்துகிறது.
டே டிரேடிங்கில் இருந்து கிடைக்கும் லாபம் ’மூலதன ஆதாயம்’ ஆகக் கருதப்படாது. வருமானமாகத்தான் இந்த வருவாய் கருதப்படுகிறது
டே டிரேடிங் மூலம் கிடைத்த வருவாயை ஏனைய வருமானங்களுடன் சேர்த்து, வருமான வரி வரம்புக்கு தகுந்த வரியைக் கட்ட வேண்டும்.
பங்குச் சந்தை திறக்கும் நேரத்துக்குப் பிறகு ஒரு பங்கை வாங்குவதும், சந்தை முடிவடையும் போது மாலை 4 மணிக்கு முன் அதனை விற்பதும் டே டிரேடிங் என வரையறுக்கப்படுகிறது
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது