தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், பலர் இரவில் பழங்களை மட்டும் சாப்பிட விரும்புகின்றனர்.
இரவு உணவு லைட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுகின்றனர்.
உணவு நிபுணர்கள், பழங்களை முக்கிய உணவாக எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர்.
இரவில் பழங்களை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால், புரத சத்து குறைபாடு ஏற்பட்டு தசைகள் வலுவிழக்கலாம்.
பழங்களை மட்டும் சாப்பிடுவதால், ஆரோக்கிய கொழுப்பு குறைபாடு ஏற்பட்டு, அதனால் ஹார்மோன் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
இரவில், கஞ்சி பொங்கல் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டு, கூடவே பழங்களை சாப்படுவது நல்லது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.