ஜப்பான் சொகுசுக் கப்பல் பயணம் செய்தவர்களில் குறைந்தது 10 பேருக்கு நொவல் கொரோனா வைரஸால் பாதித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் சீனாவின் இறப்பு எண்ணிக்கை 490, ஆக உயர்ந்துள்ளது, மேலும் மொத்த பத்திப்பு எண்ணிக்கை 24,324 ஆக உள்ளது என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். ஹாங்காங் நகரில் இருந்து ஜப்பானுக்கு இதில் மக்கள் வந்துள்ளனர். ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர்.
முதலில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் போக போக கப்பல் பயணத்திலேயே மற்ற நபர்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 3500 பேர் உள்ள இந்த கப்பலில் எல்லோரையும் ஜப்பானின் மருத்துவர்கள் நேற்று சோதனை செய்தனர். அப்போதான் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. இதனால்தான் அந்த கப்பலை உள்ளே அனுமதிக்க ஜப்பான் அரசு மறுத்துள்ளது. துறை முகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.