முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
பொதுவாக எல்லா உணவுகளுக்கும் உண்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. மாம்பழம் உண்ணும்போது சில உணவுகளை உண்ணக் கூடாது.
மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்ந்தால், வயிற்றுப் பிரச்சினைகள், வாந்தி, ஒவ்வாமை, தோல் பிரச்சினைகள் போன்றவை ஏற்படும்.
சிலர் மாம்பழ லஸ்ஸி செய்து குடிக்கிறார்கள். இதனால் உடலில் வெப்பமும், குளிர்ச்சியும் அதிகரிக்கும். மாம்பழம், தயிர் சேர்ந்தால் வயிற்றுப் பிடிப்பு ஏற்படும்.
சமையலில் பாகற்காய் சேர்த்த நிலையில் மாம்பழம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது சுவாச பிரச்சனைகளை ஏற்படலாம்.
பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொண்டால், அதனுடன் மாம்பழத்தை சாப்பிட வேண்டாம். இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும்.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடுவது உடலின் pH சமநிலையை சீர்குலைக்கும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாம்பழமும், இறைச்சியும் சேர்ந்தால் எளிதில் ஜீரணம் ஆகாது. இதனால் செரிமானத்தை பாதிக்கும்.
மாம்பழம் உண்ட பின்னர் குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.