நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும்.
இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகளை வழக்கமாக எடுத்துகொண்டால் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுக்குள் வரும்.
மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவான வெண்டைக்காய் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன.
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சீர் செய்கிறது.
ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த ப்ளூபெர்ரி இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கிறது.
ப்ரோக்கலியில் கரையும் நார்சத்து உள்ளதால் சர்க்கரை அளவை பெரிதும் கட்டுப்படுத்துகிறது.
மெக்னீஷியம் சத்து நிறைந்த பாதாம் அவாகெடோ போன்ற நட்ஸ் வகை உணவுகள் இன்சுலின் சுரபை பெரிதும் தூண்டுகிறது.