பளிச் தரை

என்னதான் நாம் அடிக்கடி சுத்தம் செய்தாலும், வீட்டின் தரை மீண்டும் மீண்டும் அழுக்காகி விடுவதுண்டு. இதை சரி செய்வதற்கான சில டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.

Sripriya Sambathkumar
Jan 30,2023
';

இவற்றை சேருங்கள்

தரையில் மாப் செய்யும்போது சில விசேஷ பொருட்களை சேர்த்தால் தரை பளிச்சென்று இருக்கும்.

';

பேகிங் சோடா

தரையை சுத்தம் செய்யும்போது நீரில் ஒரு ஸ்பூன் பேகிங் சோடா கலந்து சுத்தம் செய்து பாருங்கள். தரை வேற லெவவில் மின்னும்.

';

வாசம் வீச

சுத்தம் செய்ய பயன்படுத்தும் வாளி நீரில், சிறிது நேரத்திற்கு நேப்தலின் பால்ஸ் போட்டு வைத்து பிறகு சுத்தம் செய்தால், சுத்தத்துடன் நல்ல மணமும் கிடைக்கும்.

';

மஞ்சள், கல் உப்பு

சுத்த செய்யும் நீரில் சிறிது மஞ்சள் மற்றும் கல் உப்பு போட்டு சுத்தம் செய்தால், தரையில் எந்த பூச்சியும் வராது. தரையும் சுத்தமாக இருக்கும்.

';

கறை நீங்க

தரையில் கடினமான கறைகள் படிந்துவிட்டால், நீரில் எலுமிச்சை சாறு கலந்து அந்த இடத்தில் துடைத்தால், கறை நீங்கும். பிறகு சாதாரண நீர் கொண்டு மீண்டும் துடைக்கவும்.

';

போரெக்ஸ் பொடி

பளிச்சென்ற தரையை பெற, நீரில் சிறிய ஸ்பூன் போரெக்ஸ் பொடியை போட்டு கலக்கி பின்னர் மாப் செய்யவும். தரை பளிச்சிடும்!!

';

டிடர்ஜண்ட்

தரை பளபளப்பாக்க, டிடர்ஜண்டையும் நீரில் சேர்த்து துடைக்கலாம். ஆனால், இதை மிக சிறிய அளவிலேயே கலக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story