புயல் காரணமாக நேற்று இரவு முழுவதும் செய்து தொடர் மழையால் புழல் ஏரியில் நீர்வரத்து ஒரே நாளில் 5777 கன அடியாக உயர்ந்ததால் நேற்று வரை 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் உபரிநீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் உள்ள பாலாஜிநகரில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எந்தவித அத்தியாவசிய உதவியும் வழங்கவில்லை என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து மழை நீர் பெருக்கெடுத்து வெளியேறுகிறது. பிரதான சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து வரும் நிலையில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நான்காயிரம் கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தெருவில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி குடும்பத்திடம் ஒப்படைத்து வரும் சமூக ஆர்வலரிடம் மாமூல் கேட்டு கஞ்சா போதையில் ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.